BREAKING NEWS – பெட்ரோல் மட்டும் டீசலின் விலை குறைப்பு – முழு விபரம்!

பெட்ரோல் மட்டும் டீசலின் விலைகள் இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்ச விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசலின் புதிய விலை லிட்டருக்கு  415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply