யாழ். மாவட்டத்தில் 6ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை! மாவட்ட அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6ஆம் திகதி தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் மழையுடனான காலநிலையின் பிற்பாடு டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த வருடத்தைவிட இந்த வருடத்தில் கடந்த வாரம் வரை டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலை காணப்படுகின்றது.

கடந்த வாரம் 133 நபர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. டெங்கு அதிகமாக செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகரித்து காணப்படுகின்றது.

அதனடிப்படையிலேயே, சுகாதார விழிப்புணர்வு குழுக் கூட்டத்தில் கொரோனா, டெங்கு தொடர்பில் ஆராய்ந்து இருந்தோம்.

அதற்கிணங்க, டெங்கு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கின்றோம். அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி அந்த வாரம் யாழ்ப்பாண குடாநாடு பூராகவும் அனைத்து பங்குதாரர்களுடனும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தை நடத்தி, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் தங்களுடைய பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டினை மேற்கொள்ள கூடிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்.

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் உள்ள உள்ளுராட்சி மன்றத்தினர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியினர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணவே விரும்பினேன்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

Leave a Reply