புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

<!–

புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினராக  பதவியேற்றுள்ள வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார,  ​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற மஞ்சு லலித் வர்ண குமார, பிரதமரை சந்தித்து தனது நாடாளுமன்ற வாழ்க்கைக்கான ஆலோசனைகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்.

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மஞ்சு லலித் வர்ண குமார நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply