தனியார் கல்வி நிறுவனத்தால் பாடசாலை நேரத்தில் தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’

முல்லைத்தீவு வலயத்துக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனம் ஒன்று பாடசாலை மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றுள்ளது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனச் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவே, இவ்வாறு பாடசாலை நாளில் மாணவர்களைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து 500 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

Leave a Reply