சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் கொரிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு

வடுவ,ஒக் 18

வடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் கொரிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்று (17) மாலை ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

இன்று (18) காலை 8.30 மணியளவில் நீச்சல் தடாகத்திற்கு முன்பாக வெளிநாட்டவர் படுத்திருப்பதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்து நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் வழங்கிய தகவலின் பேரில் வாதுவ பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். தென் கொரிய பிரஜையான 43 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Leave a Reply