இரத்த வெறியோடு வீதியில் நடந்த ஜோம்பிகள்

சிலி,ஒக் 18

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற Zombie Walk’ அண்மையில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இரத்தவெறி கொண்ட ஜோம்பிஸ் போல் உடை அணிந்து வீதிகளில் இறங்கி நடக்கும் வித்தியாசமான நிகழ்வு இதுவாகும்.

ஜோம்பி நடை எனப்படும் இந்நிகழ்வு வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி உலக சாதனையை அமைப்பது அல்லது தொண்டு நிறுவனத்தை ஊக்குவிப்பது போன்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஒப்பனை ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.

வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் கொவிட்-19 காரணமாக சாண்டியாகோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிகழ்வு இடைநிறுத்தப் பட்டிருந்தது.

இவ்வாண்டு நடைபெற்ற நிகழ்வில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply