ஜனாதிபதி செயலக சொத்துக்களை சேதப்படுத்திய 9 பேர் கைது!

கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி நடைபெற்ற போரட்டத்தில் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் 09 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு வடக்கு பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

22, 23, 24, 25, 28 ,43 வயதான கொழும்பு -10, கோணகம, குருணாகல், நிகதலுபொத்த மற்றும் கொழும்பு – 10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply