சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கி வைப்பு

சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாண கிளையின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. இவ்விரதத்தினை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளPஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதித்தலைவர், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கண.வரதராஜன், கணக்காளர் நாகேந்திரன், உறுப்பினர் குணசேகரம் மற்றும் கல்முனை வைத்தியசாலையின் வைத்தியர் சோ. திருமால் பிரதான இலிகிதர் அருள் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply