‘மிரள்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிரள்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திரில்லராக உருவாகியுள்ள ‘மிரள்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தினை எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.

Leave a Reply