
நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய சம்பவங்கள் பதிவாகாதமையால், தமது விற்பனை மற்றும் விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெறுமென அந்த நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.வேகபிட்டிய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




