ஒமிக்ரான் கொரோனா தொற்றாளர் ஒருவர் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.




