ரஷ்யாவில் இரவு விடுதியில் தீ – 13 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோஷ்ட்ரோமா சிட்டியில் ஓல்கா நதிக்கரையில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், அந்த விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப் பணிகளில் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply