ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு

<!–

ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு – Athavan News

கலாச்சார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்திற்கான ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தவிசாளர் பி.ராஜதுரை என கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


Leave a Reply