ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்கள் பதவியேற்ற பின்னர், பொதுஜன பெரமுனவை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் பிரதமருடன் கலந்துரையாடுவது இதுவே முதல் தடவையாகும்.
இதன்படி, இந்த கலந்துரையாடலுக்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கூட்டணி கட்சிகளுக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கோ அல்லது விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




