பாதுகாப்பு அமைச்சு மீதான வாக்கெடுப்பு நிராகரிப்பு; கூட்டமைப்பும் முன்னணியும் சபையிலிருந்து வெளிநடப்பு.! ஆளுந்தரப்புடன் கடும் வாக்குவாதம்

பாதுக்காப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது வாக்கெடுப்பு நடத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுதொடர்பான குழுநிலை
விவாதம் ஆரம்பமானது.

விவாதத்தின் நிறைவில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பது தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கவில்லை. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமையயால் அதற்குச் சந்தர்ப்பம் இல்லை என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அவர்களின் அந்த ஆட்சேபனை பதிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதனை இவ்விரு கட்சிகளின் எம்.பிக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வாக்கெடுப்புக்கு அனுமதிவழங்கப்படாததால் ஆளுந்தரப்புடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், சபையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.

Leave a Reply