களுத்துறையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம்!

களுத்துறை – பொலஸ்ஸகம பகுதியில் களுகங்கையின் இறங்கு துறை க்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின் போது, குறித்த படகுப்பாதையில் 05 பேர் பயணித்துள்ளதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சைக்கிளொன்றும் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போன நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப் படவில்லை என்றும் அவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கடற் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply