மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: வர்த்தக நிலையத்திற்குள் புகுந்தது கார்!

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்தக நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, ஹொறவப்பொத்தானை வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து ஹொறவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான கார் அப்பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், வர்த்தக நிலையத்திற்குள் புகுந்தது.

இதன் காரணமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை: இராதாகிருஸ்ணன் கண்டனம்!

Leave a Reply