
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் குறித்து, நாடாளுமன்றில் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.
முல்லைத்தீவில் நவம்பர் 27ஆம் திகதி ஊடகவியலாளர் விஸ்வா மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றுமுன்தினம் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் சுலக்சன் பருத்தித்துறையில் துப்பாக்கி முனையில் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது பொலிஸாரின் அராஜகம். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுதான் நிலைமை. அவர்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செய்தியை எடுக்க முடியவில்லை.
இலங்கைப் பொலிஸார் ஊடகவியலாளர்களைச் சுடுவார்கள். மக்களைச் சுடுவார்கள் என்ற நிலைமையே காணப்படுகின்றது – என்று அவர் மேலும் தெரிவித்தார்.



