ஃபோர்க் லிப்ட் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் பலி!

தம்புள்ளை – கந்தளம வீதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் ஃபோர்க் லிப்ட் இயந்திரத்தில் சிக்கி அதன் இயக்குநர் உயிரிழந்துள்ளார்.

தான் செலுத்திச் சென்ற ஃபோர்க் லிப்ட் இயந்திரத்தில் கம்பி சிக்கியதால், குறித்த அதனை அகற்ற முயன்றுள்ளார்.

அதன்போது, குறித்த இயந்திரத்தில் தலை சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

பின்னர் குறி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply