லடாக்கில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply