தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறைவாரியாக அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை தமிழக சட்டசபையின் வரவுசெலவு கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.

வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பதாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழமையான நிகழ்வாகும்.

Leave a Reply