சடுதியாக குறைக்கப்பட்ட மின்வெட்டு நேரம் – வெளியான அறிவிப்பு

நாளைய தினத்திற்கான( டிசம்பர் – 7) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 1 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 03.00 மணி முதல் 06.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply