கடற்கரையில் திடீரென கரையொதுங்கிய பெருமளவு மீன்கள்: அதிர்ச்சியடைந்த மக்கள்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாழமுக்கம் தாங்க முடியாத மீன்கள் கரைகளில் குவிந்துள்ளன.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின்  மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் பகுதியிலேயே இவ்வாறு மீன்கள் இன்று  குவிந்துள்ளன.

கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திடீரென மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியமை ஏதேனுமொரு அனர்த்தத்திற்குரிய அறிகுறியாக இருக்கலாமோ? என மக்கள் அஞ்சுகின்றனர்.

Leave a Reply