எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – நட்டஈடு வழங்குவதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

<!–

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – நட்டஈடு வழங்குவதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – Athavan News

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக இதுவரையில் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தற்போது வழங்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு முறையான மற்றும் ஒழுங்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply