யாழ். நாவற்குழி பகுதியில் வாள் வெட்டு: இருவர் காயம்!

யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இன்று, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.

குறித்த பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதன்போது 20, 21 வயது இளைஞர்கள் இருவரே காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக கடலாமையை பிடித்து செல்ல முற்பட்ட மூவர் கைது!

Leave a Reply