நுவரெலியாவில் அடுத்தடுத்து வெடித்த எரிவாயு அடுப்புக்கள்!

நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இன்று மதியம் எரிவாயு அடுப்புகள் பல வெடித்துள்ளன.

குடியிருப்பாளர்கள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அடுப்பு வெடித்ததால், எரிவாயு அடுப்பு பலத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நானுஓயா எடின்புரோ தோட்டம்,, பூண்டுலோயா ஹெரோ தோட்டம், ஹற்றன் வெளிஓயா மேற்பிரிவு தோட்டம் ஆகியவற்றிலும் இன்று எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளன.

Leave a Reply