பிரியந்தவை பாதுகாக்க முயன்ற மாலிக் அத்னனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிவைப்பு!

பாகிஸ்தான், சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான்கானால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படைவாதிகளினால் பிரியந்த குமார தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மாலிக் அத்னன் தனிநபராக போராடியிருந்தார்.

அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி ‘தம்ஹா ஐ சுஜாத்’ என்ற அதியுயர் விருதையும் வழங்கவுள்ளார்.

பிரியந்தவின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் டொலர் இழப்பீடாக வழங்க பாகிஸ்தான் அரசு தீர்மானம்!

Leave a Reply