
குளிக்கச்சென்றவர் வயல் பகுதியில் தவறி விழுந்த நிலையில் உயிரழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநகரி-நல்லுர் பகுதியில் வசிக்கும் கந்தையா மோகனலிங்கம் (வயது-66 )என்பவரே உயிரிழந்துள்ளார்.
மடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் குளிப்பதற்கு குளத்திற்கு சென்ற வேளை வயல் பகுதியில் தவறி விழுந்த நிலையில் சடலமாக இனங்காணப்பட்டார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



