காலியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு 

காலி- அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கம்பொல பகுதியிலுள்ள வீதியொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காலி- தல்கம்பொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலை சம்பவம் நீண்ட நாட்களாக ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply