அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் வாகனப் பேரணி

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாண புதிய அதிபர் சங்கம் என்பன இணைந்து யாழில் வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

இதுவரையில் அதற்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

இதனடிப்படையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

குறித்த வாகனப் பேரணியில் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply