தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் – நாடாளுமன்றில் இன்று அறிவிப்பு

தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அத்துடன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் கடந்த சில நாட்களாக அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply