மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, விளக்கம் அளித்துள்ளார்.
இதன்படி, அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய பொது மக்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டியவர்களும் மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மாகாணங்களை தாண்டும் அனைவரும் உரிய அடையாள அட்டை, அத்தாட்சிப்படுத்தும் ஆவணங்களை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என தெரிவித்தார்.