தீ பெட்டி ஒன்றுக்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் 35 வயதுடைய சந்தேக நபர்  ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடமிருந்து விற்பனை செய்வதற்காக பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 535 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர் ஐஸ் போதைப் பொருளுடன் பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வீதியில் நிற்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேடமாக போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஸங்க கொடமுன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுவினரே இவ் சுற்றி வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply