கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கல்வயல் நுணாவில் வீதியில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்து அடிக்கல்லினை நாட்டிவைத்தார்
மேலும் இன் நிகழ்விற்கு யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், சாவகச்சேரி நகராட்சி மன்ற செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர், மற்றும் நகராட்சிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்
இரும்பினும் சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை





