ஈஸ்டர் தாக்குதல் : மைத்திரிக்கு எதிராக CID யில் முன்னிலையாக தயார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு என தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ தனது வாதத்தை முன்வைக்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க தெரிவித்தமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் ஜூட் கிரிசாந்த குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டால் தனக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் வெளியிடத் தயார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply