நாட்டில் இன்றும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் – மின்சக்தி அமைச்சு

<!–

நாட்டில் இன்றும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் – மின்சக்தி அமைச்சு – Athavan News

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று மாலை 06 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் வெவ்வேறு நேரங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில், ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.


Leave a Reply