நண்பனை வீட்டில் இறக்கிவிட சென்றவருக்கு ஏற்பட்ட கதி..!

பேருவளை, பந்தனாகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து நேற்று (13) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பந்தனாகொட பிரதேசத்தில் அருகில் பலா மரத்தில் மோதியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய திருமணமாகாத 41 வயதுடைய கெமுனு மங்கள ஜயரத்ன என தெரியவந்துள்ளது.

பணி முடிந்து தனது நண்பரை வீட்டில் விட்டு வரச் செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், விபத்தில் நண்பரும் படுகாயமடைந்தார்.

விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் நிறைந்த பகுதியாக உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply