மன்னார் மற்றும் வத்தளை கடற் பகுதிகளில் காணாமல் போன நால்வர்!

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் போயுள்ள கடற்றொழிலாளர்கள் இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மோட்டார் படகொன்று நேற்று மன்னார் பள்ளிமுனை கடற்பகுதியில் பழுதானதில் குறித்த இருவர் காணாமல் போயுள்ளதுடன் மற்றுமொருவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் இருவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வத்தளை- டிக்கோவிட்ட கடற்பிராந்தியத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களையும் தேடும் பணிகள் தொடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply