மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில் காணப்படுகின்ற ஆலமரத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராயேந்திரன் இராஜன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய, களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் பார்வையிட்டு, விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply