நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்துவதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நள்ளிரவுடன்  நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் அடிப்படையில் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது.

Leave a Reply