அதிவேக நெடுஞ்சாலைப் பயன்படுத்தும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு கட்டணம் இல்லை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வண்டிகள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு அம்பியூலன்ஸ் வண்டிகள், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு அம்பியூலன்ஸிற்கும் கட்டணம் விதிக்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, மே 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply