அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசம்!

<!–

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இலவசம்! – Athavan News

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்   அம்பியூலன்ஸ் வண்டிகளிடம்  கட்டணம்  அறவிடப்படமாட்டாது என   நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளின் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம்    இவ்வாறு  கட்டணம் அறவிடாதிருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர்  நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டது. கொரோனா தொாற்று காரணமாக நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு  அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ்களிடம்  கட்டணம் அறிவிடுவதை மே மாதம் 20 ஆம் திகதி முதல்  மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும்  தெரிவித்துள்ளார்.


Leave a Reply