சகல அரச சேவையாளர்களையும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 7 மணிமுதல் 11 மணிவரை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
அத்தோடு இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் வைத்தியசாலைகளிலுள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் கடந்த இரண்டு நாட்கள் முன்னெடுத்திருந்த சுகயீன விடுமுறையின் கீழான தொழிற்சங்க நடவடிக்கை இன்று முற்பகலுடன் நிறைவுக்கு வருகின்றது.
மேலும் 180 நாட்கள் பணியாற்றிய சகல சுகாதார சேவையாளர்கள் மற்றும் தற்காலிக சேவையாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.