ஒரு இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 97 ஆயிரத்து 966 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 85 இலட்சத்து 27 ஆயிரத்து 195 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நேற்று 11 ஆயிரத்து 58 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 18 இலட்சத்து 23 ஆயிரத்து 802 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று 50 ஆயிரத்து 893 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 30 ஆயிரத்து 499 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஆயிரத்து 308 பேருக்கு ஃபைஸர் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 5 ஆயிரத்து 625 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாம் தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply