வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பேரணி!

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பேரணி நடத்தவுள்ளனர்.

தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இடம்பெறும் பேரணியில்  பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விவசாய சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், தமிழக விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்கள், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply