வீதியை கடக்க முயன்றதால் பறிபோன உயிர்: யாழில் சம்பவம்

யாழ். பருத்தித்துறை – புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது பட்டா வாகனம் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (04) யாழ்ப்பாணம், புலோலி – சாரையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (வயது-82) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply