600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தம்

<!–

600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தம் – Athavan News

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி அவர்கள் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையில் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து சுகாதார பணியாளர்களையும் கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் எனவும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply