மக்களை பட்டினியில் தள்ளவே மாட்டோம்! தானே பொறுப்பு என்கிறார் பந்துல

அத்தியாவசிய பொருட்களைத் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக
அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும்
ஒருபோதும் மக்களைப் பட்டினியில் தள்ளப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒரு கிலோ அரிசியின் விலையை 300 ஆக உயர்த்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும் அந்த திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டன. தற்போது 1 கிலோ நாட்டு அரிசி 99.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது-என்றார்.

Leave a Reply