தம்பலகாமத்திலும் வெறிச்சோடி காணப்பட்ட தபாலகங்கள்

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தம்பலகாமத்தில் உள்ள அனைத்து தபாலகங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும், நேற்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தம்பலகாமம் பகுதியில் உள்ள உப தபாலகங்களும் இன்று (14) செவ்வாய்க்கிழமை மூடியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இதனால் மக்கள் தபாலகத்துக்கு சென்று திரும்பினர். தம்பலகாமம் உபதபாலகம்,கல்மெடியாவ உப தபாலகம் உள்ளிட்ட அனைத்து தபாலகங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

சேவையுடன் தொடர்புடைய தங்களது பிரச்சினைகள் உள்ளிட்ட, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டன.

திங்கட்கிழமை 13ஆம் திகதி மாலை 4 மணிமுதல், இன்று 14 ஆம் திகதி நள்ளிரவுவரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

Leave a Reply