காரைதீவு பகுதியில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார் இன்று மாலை மீட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு கொம்புச்சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் பொலிஸ் குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்தூப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டினுள் குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயதுமதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் சம்மாந்துறை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கைதாகிய சந்தேக நபர் தாதிய உத்தியோகத்தராகவும், விடுதலைப்புலிகளுடனும் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply